Monday, March 13, 2017

மனம் கொத்தி செல்


அவ்வப்போது - என் மனம் கொத்தி செல் பசுமை மறந்த- என் மனக் கிளைகள் மரணிக்காமல் தழைக்க.

Thursday, December 4, 2014

காட்சி பிழை


காட்சி பிழை

ஊருக்கு திரும்பும் ஒவ்வொருமுறையும்
மனதில் அறைகிறது அந்த காட்சி
உன் மணநாளில் உன் அருகில்
ஊமையாய் நின்று எடுத்த நிழல் பட காட்சி...

Saturday, May 21, 2011

என் பிள்ளைகள் என்ன செய்யும்?




கோலி குண்டு , கில்லி,
இலந்தை பழம் தேடல்,
நெல்லிக்கனி திருட்டு,
பனைமரம் ஏறுதல்,
நிமிட கணக்காய் கிணற்று நீரில் மூழ்கி இருத்தல்,
பொன்வண்டு பிடித்தல்,
கிளி வளர்த்தல்,
ஆடுகளுடன் அன்பு பகிர்தல்,
நாய்க் குட்டிகள் திருடல்,
தட்டாம்பூச்சி பிடித்தல்,
பூக்களில் தேன் உறிஞ்சுதல்,
காக்கை கூடு அழித்தல்,
கண்ணாமூச்சி ஆடுதல்,
தேன் கூடு அழித்தல்
...இப்படியாக
இனிய தருணங்கள்....
எத்தனையோ என்னால் பதிவு செய்யபடவில்லை...
என் பிள்ளைகளுக்கு,
பதிவு செய்ய எத்தனையோ வழிகள் ...ஆனால்
பதிவதற்குரிய இனிய தருணங்கள்... ?!

எல்லோருக்கும் எச்சரிக்கை!!!





நிலா இங்கே வா வா !
என் அம்மாவிற்கு அடுத்து
அதிகமாய் நேசித்தது இவளைதான்.
இவள் பார்வையின் குளிர்ச்சியை போர்த்திக்கொண்டு
கண்ணுறங்கிய நாட்கள் எண்ணிலடங்காதவை...
என் முதல் காதலி,
என்னை முத்தமிட வருகிறாள்
இம்மாதத்தில்.
எங்கள் சந்திப்பில்
இந்த பூமி வெப்பமடையலாம், ஆதலால்
எல்லோருக்கும் எச்சரிக்கை!!!

Saturday, June 27, 2009

பூ-மாரி

பூ - திரைப்படம் பார்த்தேன்.
உலக பெண்களிலேயே
மனதளவில்
மிக அழகானவளாம்.
கதையின் நாயகி - மாரி.
அவளைவிட
நீ அழகானவள் என்பதை
எப்போது ?
இவ்வுலகுக்கு உரைப்பேன்.

Friday, October 17, 2008

ஜெயலலிதா வின் புது அவதாரம்

அம்மா என்றால் அன்பு என்றறிந்த
தமிழனுக்கு ...
அம்மா என்றால் இனி நான்தான் என்று ஆணையிட்டவள்...
கற்புகரசியாம் கண்ணகியை அறியாத
இவளுக்கு புணை பெயர்கள் ...
காவேரி தாயாம் ...
கன்னி தாயாம்...
மக்கள் பிரச்சனைகளால் நொந்திருக்க -கோடை
மலையில் நோகாதிருந்தவள்...
தற்போது
தமிழகத்தின் "ராஜபக்சே "
இவள்தான்.
தமிழ் ஈழம் மலர
தம்பி பிரபாகரனுக்கு
புரட்சி ஒன்றே வழி என்றுரைத்து
பொன்னும் பொருளும் வழங்கிய
பொன்மன செம்மலின் வாரிசாம் இவள் (?) ...
தமிழனை எப்போதும்
தன் காலில் விழ செய்யும் இவள் ...
தமிழனை காவு வாங்க ,
இலங்கை அரசுக்கும் துணை நிற்கிறாள்.
தமிழினமே ....
இவள் "கன்னடகாரி" யாக தன்னை நினைக்கையில் ...நீ மறக்கலாமோ?

தமிழனுக்கு ஒரு கவிதை

தமிழனுக்கு தமிழன் என்பார்
தமிழ் பெயர் சூட்ட சொல்லி
தண்டவாளத்தில் தலையும் கொடுப்பார்
தன் மரணம் வரை ,
தமிழனுக்கு உழைப்பேன் என்று
தமிழர்களை மடையர்களாக்கி
தவறாமல் மத்தியில் ஆட்சி செய்வார்.
தனக்கே உரிய 'நரி' தனத்தால்
தரைவழி,தகவல் தொழில் துறையெல்லாம் கேட்டு பெறுவார்.
அரசியல் பொழுது போக்க ,
புலிகளுக்கு இரங்கல் கவி எழுதி "கலகம்" செய்வார்.அதே வேளை ,
புலிகளை முழுதாக ஆதரிப்போர் மீது (nedumaran)
புழுதி தூற்றுவார்.
கொல்லை புறத்தில் கூட்டம் சேர்த்து-புலிகளை
தாம் ஆதரித்தது பற்றி "புலன்காங்கிதம்" கொள்வார் .அவர்கள்
வாழ்வுக்கொரு விடியல் தேடார்.
தன் மகளுக்கு முடி சூட்ட "மன்மோகனை " நிர்பந்திப்பார் ...
தமிழ் ஈழ மக்களுக்கு வாழ்வு தர
தவறாமல் கடிதம் mattum வரைவார் ,
தந்தி அனுப்ப தமிழர்களுக்கு உத்தரவிடுவார்,
தாம்பரத்தை தாண்டவேண்டும் மனித சங்கிலி என்பார்
தம் எம் பி க்களின் ஆதரவை மீட்டுக்கொள்வதை
தந்திரமாய் தள்ளி வைப்பார்.
கவிதையில் வல்லவராம் இவர்...
கதை வசனத்தில் வல்லவராம் இவர்...அரசியல்
நாடகத்தில் தேர்ந்தவராம் இவர் ....உலக
தமிழர்க்கு தலைவராம் இவர்...
ஏய் தமிழா ...
"மக்கள் நலம் மக்கள் நலம் என்பார் -அவர் தம்
மக்கள் நலம் ஒன்றே மனதில் கொள்வார்."
நீ
ஈனங்கெட்ட பிறவியாக (?)
இனியும் இருக்காதே .